இன்று பிரதமர் மோடிக்கு 64வது பிறந்தநாள். தாயாரின் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

modi birthday
இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 64வது பிறந்தநாள். தனது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள தாயாரின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு இன்று வருகை தரவுள்ள சீன அதிபர்  ஜீ ஜின்பிங் அவர்களை வரவேற்பதற்காக அங்கு சென்றுள்ள நரேந்திர மோடி, தனது 64-வது பிறந்த நாளான இன்று, காந்திநகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீரா பென்னை நேரில் சந்தித்து அவரிடம் பிறந்தநாள் ஆசி பெற்றார். தாயாரின் பாதங்களை தொட்டு வணங்கிய நரேந்திர மோடியை, அவரது தாயார் உச்சிமுகர்ந்து வாழ்த்தினார். பின்னர் மோடிக்கு தாயார் ஹீரா பென், இனிப்பு வழங்கினார்.

இந்திய பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக குஜராத் மாநிலத்திற்கு நரேந்திர மோடி வந்துள்ளதாலும்,  அகமதாபாத்திற்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரவுள்ளதாலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று 64வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமருக்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply