- மேஷம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்காகச் செலவிட்டு மகிழ்வீர்கள். உத்யோகத் தில் உயர்ந்த நிலையடைய சர்ந்தர்ப்பம் கைகூடி வரும். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
- ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
- மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விருந் தினர் வருகை அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.
- கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்கருத்து அதிகமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
- சிம்மம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சிலர் உதவிக் கேட்டு நச்சரிப்பார்கள். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
- கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பால்ய நண்பர் கள் உதவுவார்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
- துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்த வர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
- விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் நெருக் கம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
- தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். செய்நன்றி மறந்தவர்களை நினைத்து வருந்துவீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
- மகரம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். சகோதர வகையில் உதவி கள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
- கும்பம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.
- மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.