இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்: புதிய அறிவிப்புகள் இருக்குமா?

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்: புதிய அறிவிப்புகள் இருக்குமா?

2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்கிறார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை ஆகியவை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே சமயத்தில் தமிழக அரசு ஏற்கனவே கடனில் தத்தளித்து கொண்டிருப்பதால் புதிய அறிவிப்புகள் இருப்பது சந்தேகம்தான் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசின் நிகர கடன் தொகையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துத் துறைகளிலும் வருமானத்தை பெருக்கும் வகையிலான அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்றும் எனவே வரிவிதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் தனியார் வசம் உள்ள கனிம வள மற்றும் கிரானைடு குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும், அதேபோல் டாஸ்மாக் நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் இலவச திட்டங்கள் அனேகமாக இருக்காது என்றே கூறப்படுகிறது.

Leave a Reply