கடும் பதற்றத்திற்கிடையே இன்று தாய்லாந்தில் பொதுத்தேர்தல்.

தாய்லாந்து நாட்டில் போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் அமைதியாக நடைபெற லட்சக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்து தேர்தலில் வாக்குப்பதிவில் பங்கேற்க வேண்டாம் என போராட்டக்குழுவின் தலைவர் சுதெப் தௌக்சுபென் (SUTHEP THUAGSUBAN) அறிவித்துள்ள நிலையில் இன்று பொதுத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா இன்று காலை ஓட்டு போட்டார். இந்த தேர்தலில் இவரது கட்சி அபார வெற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

 

Leave a Reply