கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிக்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 243 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 628 தேர்வுக் கூடங்கள் இந்த தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விஏஓ தேர்வு நடைபெறுகிறது. வெப்கேமிரா மூலம் ஒரு சில தேர்வு இடங்களை கண்காணிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்வு கூடங்களின் அனைத்து மையங்களையும் கண்காணிக்க ஒவ்வொரு மையத்திற்கு ஒரு ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக்வும், மேலும் தேர்வு நடக்கும் இடங்களை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சோபனா தெரிவித்துள்ளார்.
வி.ஏ.ஓ தேர்வு எழுத செல்லும் விண்ணப்பதாரர்கள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது விடைத்தாள்கள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவர் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா எச்சரித்துள்ளார்.