சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி: அமைச்சர் சேகர் பாபு
சென்னை கோயம்பேடு காய்கறி, பழங்கள் மார்கெட்டில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அதன்பினர் கழிவறை, குடிநீர் மற்றும் தொழிலாளர் தங்கும் வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மார்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரங்களையும் முறைப்படுத்த திட்டம் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார்.
மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்த திட்டம் என்றும், பண்டிகை கால சிறப்பு சந்தையின் போது இடைத்தரகர்கள் இடையூறு செய்வதை கட்டுப்படுத்துவோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
–