வைஃபை, டிவி வசதியுடன் இலவச கழிப்பறை. பீஜிங் மாநகராட்சி திட்டம்

வைஃபை, டிவி வசதியுடன் இலவச கழிப்பறை. பீஜிங் மாநகராட்சி திட்டம்
beijing
சீனத்தலைநகரான பீஜிங் நகரில் இலவச வை-ஃபை வசதியுடன் கூடிய நூறு அதிநவீன கழிவறைகளை அமைக்க பீஜிங் மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அங்கு 2016ஆம் ஆண்டுக்குள்  நூறு அதிநவீன கழிவறைகளை அதிகளவில் கட்டுவதற்கு பீஜிங் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த கழிவறையில் இலவசமாக வை-ஃபை, கழிவறைக்குள் டிவி வசதி ஆகியவை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக டோங்சோ, பாங்சான் மாவட்டங்களில் வை-ஃபை வசதியுடன் கூடிய கழிவறைகள் நிறுவப்பட உள்ளதாகவும் மேலும் இந்த நகரத்தில் ஆங்காங்கே ஏ.டி.எம் இயந்திரங்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தித் தர மாநாகராட்சி திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அதேபோல், கழிவறைகளுக்கு அருகிலேயே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்காக ’பேபி சிட்டிங்’ வசதியும் செய்து தரப்படவுள்ளது. ஒவ்வொரு கழிப்பறையும் சுமார் ஒரு லட்சம் யுவான் திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply