தக்காளி – புதினா புலாவ்

download (3)

தேவையான பொருட்கள்  :

பச்சரிசி சாதம் – ஒரு கப் (உதிரியாக வடித்தது),
உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

புதினா – ஒரு கைப்பிடி,
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 4 பல்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

தனியே அரைக்க:

தக்காளி – 3.

தாளிக்க:

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டை – ஒரு துண்டு.

செய்முறை:

• புதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

• தக்காளியைத் தனியே அரைத்து வடிகட்டுங்கள்.

• எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை தாளித்து, புதினா-கொத்தமல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.

• பிறகு அதில் தக்காளி சாறு, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி சாறு சற்று பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி, அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் இறக்குங்கள்.

• சூடாக பரிமாறுங்கள்.

• சற்றுப் புளிப்புச் சுவை விரும்புபவர்கள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply