பாலைவனத்தை சோலைவனம் ஆக்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்
பாலைவனம் என்றாலே தண்ணீர் இல்லாமல் வறட்சியான பகுதி என உலகம் முழுவதும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பாலைவனம் ஒன்றில் 20 ஏக்கரில் தக்காளியை விளையவைத்து அந்நாட்டு விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர்.
இந்த மாபெரும் பசுமை புரட்சிக்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தியது வெறும் கடல் நீர் மற்றும் சூர்ய வெளிச்சம் மட்டுமே. 10 கிலோமிட்டர் தூரத்தில் உள்ள கடல்நீரை பைப் மூலம் கொண்டு வந்து அதை தாங்கள் கண்டுபிடித்த கருவியின் மூலம் உப்புத்தன்மையை நீக்கி பாலைவனத்தில் விஞ்ஞானிகள் விவசாயம் செய்தூள்ளனர்.
20 ஹெக்டேர் நிலத்தில் 17,000 டன்கள் தக்காளி விளைந்துள்ளது என்பதே இந்த சாதனையின் அதிசயம். மேலும் தக்காளியை அடுத்து வேறு வகைகளையும் பயிர்செய்ய அடுத்தகட்டமாக விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
Chennai Today News: Tomatoes grown in Australian desert from sunshine and seawater