இணையதளங்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் +2 தேர்வு முடிவுகள். தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

resultதமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணு இணையதளங்களில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

1. http://tnresults.nic.in/
2. http://dge.tn.gov.in/
3. http://www.dge1.tn.nic.in/
4. http://dge2.tn.nic.in/
5. http://www.dge3.tn.nic.in/

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வுகள் நடந்தது. தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடந்தது. இந்நிலையில் நாளை தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக தமிழக அரசின் தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் எஸ்.எம்.எஸ் மூலமும் தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துளது. செல்போனில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள TNBOARD என்று ஆங்கிலத்தில் டைப் செய்து இடைவெளி விட்டு தேர்வு பதிவு எண்ணை டைப் செய்ய வேண்டும். பின்னர் பிறந்த தேதியை பதிவு செய்தவுடன் 9282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், மாணவர்களின் தேர்வு முடிவும் மதிப்பெண் பட்டியலையும் செல்போன் மூலமே தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி நாளை காலை 10 மணிக்கு பின்னர் செயல்பட தொடங்கும்.

Leave a Reply