பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முந்தைய திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த தேர்வுகளை கேலிக்கூத்தாக வகையில் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள்கள் லீக் ஆகி வருகின்றன
இந்த நிலையில் ஏற்கனவே 3 தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் லீக் ஆகியுள்ள நிலையில் தற்போது நாளை நடைபெற உள்ள பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு பொருளியல் பாட வினாத்தாள் லீக்காகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இதனை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் இந்த அளவுக்கு கேலிக்கூத்தாக இதுவரை தமிழகத்தில் எந்த தேர்வும் நடந்தது இல்லை என்றே கூறப்படுகிறது