பெங்களூரில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு தமிழக -கர்நாடக மாநில எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை அறிய பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்திற்கு நாளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வருகை தரவுள்ளதால்தமிழக – கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் 6000க்கும் மேற்பட்ட கர்நாட மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீர்ப்பு வழங்கப்படும் நாளில் தமிழகத்திலிருந்து மிக அதிகளவில் அதிமுக கட்சித் தொண்டர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் எம்.என் ரெட்டி தெரிவித்துள்ளார்