நாளை காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு.

5தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வை சுமார் 11 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்து முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆயிரத்து 552 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 462 பேர் எழுதினார்கள். இவர்களில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 462 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 8 ஆயிரத்து 414 பேர் மாணவிகள். இவர்கள் தவிர தனித்தேர்வர்கள் 74 ஆயிரத்து 647 பேர்கள்.

தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும்பணி மும்முரமாக நடந்து ஒவ்வொரு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கோட்டூர்புரத்தில் உள்ள தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டன. அதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு தயார் ஆக உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge1.nic.in ) காணலாம்.

மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply