லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே உதவிய விவகாரம், நிலம் கையகப்படுத்தும் மசோதா போன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே நாளை பாராளுமன்றம் கூடவுள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ள இந்த பிரச்சனையை எப்படி மோடி தலைமையிலான ஆளும்கட்சி சமாளிக்கப்போகிறது என்பதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
இந்த கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்,
இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறை வேற்ற விடமாட்டோம் என்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்து வருகிறார். எனவே இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேபோல் மற்றொரு முக்கிய மசோதாவான சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவும் நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவும் நாடாளுமன்ற குழுவின் பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அமல்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு தீவிரமாக உள்ளது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பது குறித்து பாஜக ஏற்கெனவே பல முறை ஆலோசித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, டெல்லியில் அனைத்து கட்சிகள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் மோடி,” நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. அனைத்து பிரச்னைகள் பற்றியும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும். பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த மத்திய அரசு உறுதி பூண்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.