நாளை ரஜினி-மோடி சந்திப்பு. பாரதிய ஜனதாவுக்கு ஆதரவை தெரிவிக்கின்றாரா?

Rajinikanth

 

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை நாளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கூட்டணிக்கு தனது ஆதரவை கொடுப்பார் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினிகாந்த், ஏதாவது ஒரு கட்சியோ அல்லது கூட்டணிக்கோ தனது ஆதரவை கொடுப்பது வழக்கம். இந்த தேர்தலில் அவர் இதுவரை யாருக்கும் வாய்ஸ் கொடுக்காமல் இருந்தார். இந்நிலையில் நாளை சென்னை வரும் நரேந்திரமோடியை விமானநிலையத்தில் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்.

ரஜினியும், மோடியும் ஏற்கனவே நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ரஜினிகாந்த் உடல்நலமின்றி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை நரேந்திரமோடி நேரில் சென்று பார்த்தார். அந்த நட்பின் அடிப்படையில் தனது ஆதரவை அவர் பாரதிய ஜனதாவுக்கு நாளை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

நரேந்திரமோடி நாளை மாலை 6 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதன்பின்னர் மீண்டும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

Leave a Reply