ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் அணி கோரிக்கை. சபாநாயகர் முடிவு என்ன?

ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் அணி கோரிக்கை. சபாநாயகர் முடிவு என்ன?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் கோரவுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் இரண்டு முறை உள்ளது. ஒன்று வெளிப்படையாக நடத்துவது, மற்றொன்று ரகசியமாக நடப்பது.

வெளிப்படையாக நடந்தால் அரசை யார் ஆதரிக்கின்றார்கள், யார் எதிர்க்கின்றார்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம், ஆனால் ரகசியமாக வாக்குச்சீட்டின் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஆதரித்தவர் யார், எதிர்த்தவர் யார் என்பது தெரியாது. முடிவு மட்டுமே தெரியும்

இந்நிலையில் சற்றுமுன் சட்டமன்ற சபாநாயகர் தனபால் அவர்களை ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன், செம்மலை, பொன்னையன், சண்முகநாதன் ஆகியோர் சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தேர்வு முறையை ரகசியமாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முடிவு சபாநாயகர் கையில் இருப்பதால் அவருடைய முடிவு என்ன என்பதை நாளை தான் அனைவரும் அறிய முடியும்

Leave a Reply