நாளை அமெரிக்க அதிபர் தேர்தல். வெற்றி பெறுவது யார்?

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல். வெற்றி பெறுவது யார்?

hilariஉலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. அடுத்த அதிபர் ஹிலாரி கிளிண்டனா? அல்லது டொனால்ட் டிரம்பா? என்பதை முடிவு செய்யும் நாள் நாளை தான்.

மொத்தம் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் வாக்குகள் உள்ள அமெரிக்காவில் ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே ஓட்டு போடும் வசதியை பயன்படுத்தி, ஓட்டு போட்டுவிட்டனர். ஓட்டு போட்டவர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கே அதிக வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இறுதி நேரத்தில் கிளம்பிய இமெயில் விவகாரம் ஹிலாரிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. இதனால் நாளைய வாக்குப்பதிவில் டொனால்ட் டிரம்புக்கு அதிக வாக்குகள் விழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று நடைபெறவுள்ள இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஒபாமா, மிச்சேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பில்கிளிண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இதேபோல் டிரம்ப்பும் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காக மிச்சிகன், பென்சில்வேனியா, இயோவா, புளோரிடா, வடக்கு கரோலினா, வெர்ஜீனியா மாகாணங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

வெற்றி பெறும் வேட்பாளர் அமெரிக்க அதிபராக வரும் ஜனவரியில் பதவி ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply