முருகப்பெருமான அவதரித்த திருநாளான வைகாசி விசாகம் நாளை முருகனின் திருத்தலங்கள் அனைத்திலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுபிரமணியன் சுவாமி திருக்கோவிலில் நாளை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் கோவிலில் இன்றும் நாளையும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் வெகு விமரிசையாக கொண்டாட உள்ளது. இன்று அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.
அதேபோல் நாளை நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அதன்பின்னர் 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் எழுத்தருள்கிறார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து முருகப்பெருமானின் அருளை பெற திருச்செந்தூரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை முக்கிய நகரில் இருந்து திருச்செந்தூருக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. நாளை விசாகத்திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன