இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்குகிறது. முதல் முடிவுகள் காலை 9 மணிக்கு மேல் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் 15வது நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைந்ததை ஒட்டி, 16வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக கடந்த இரண்டு மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. மே12 ஆம் தேதி 9வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து ஓட்டுக்களும் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன
காலை 8மணியளவில் தபால் ஓட்டுகளும் அதைத் தொடர்ந்து மின்னணு இயந்திரங்களிலும் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை 9 மணிக்கு வெளிவரும் என்றும் அதன்பின்னர் மாலைக்குள் கிட்டத்தட்ட அனைத்து முடிவுகளும் தெரியவரும். வாக்குகள் அனைத்தும் தொடர்ந்து விடிய விடிய எண்ணப்பட்டு 17ஆம் தேதி அதிகாலைக்குள் 543 தொகுதிகளுக்கும் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும் என தேர்தல் ஆணையும் கூறியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அனைத்தும் உடனுக்குடன் பொதுமக்கள் தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உடனுக்குடன் முடிவுகள் வெளியிடப்படும்.