பழைய நோட்டுக்களை நாளை மாற்ற முடியாதா?
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உண்மையில் பணம் வைத்திருந்த நடுத்தர, ஏழை, எளிய மக்கள் மாற்றிவிட்டனர். இப்போது வரும் கூட்டம் எல்லாம் கருப்பு பண முதலாளிகளின் கையாட்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மை வைக்கும் நடைமுறை வந்த பின்னர் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற வரும் கூட்டம் 40% ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் பழைய ரூ.500,1000 ரூபாய் நோட்டுகளை நாளை வங்கிகளில் மாற்ற முடியாது என்று இந்திய வங்கிகள் அசோசியேஷன் தலைவர் ராஜீவ் ரிஷி தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மூத்த குடிமக்கள் மட்டும் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மற்றபடி வங்கிகள் வழக்கம்போல் நாளை திறந்து இருக்கும் என்றும் வங்கிகளில் தேங்கிய வேலைகள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.