ஐடி துறையின் அதிரடி வீழ்ச்சி: 56,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது 7 முன்னணி நிறுவனங்கள்

ஐடி துறையின் அதிரடி வீழ்ச்சி: 56,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது 7 முன்னணி நிறுவனங்கள்

சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்பட இந்தியாவின் முன்னணி நகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த ஐடி துறை, டிரம்பின் பதவியேற்புக்கு பின்னர் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் இந்தியாவில் உள்ள 7 முன்னணி ஐடி நிறுவனங்கள் சுமார் 56000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.

லட்சக்கணக்கில் சம்பளம், கார், பங்களா, வெள்ளி இரவு பப் வாழக்கை என்று ஆடம்பரத்துடன் வாழ்ந்த ஐடி இளைஞர்களின் கனவில் மண்ணை அள்ளித்தூவி விட்டார் டிரம்ப். அவரது அதிரடி நடவடிக்கையால் இந்தியா உள்பட பல நாடுகளில் ஐடி துறை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது

இந்த வீழ்ச்சி காரணமாக இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் (HCL), அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட காக்னிஸன்ட், DXC டெக்னாலஜி, ஃப்ரான்ஸின் Cap Gemini SA நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் திடீரென ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சேர்ந்த இளைஞர்கள் முதல் நீண்ட வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள் வரை சுமார் 56000 ஊழியர்கள் இந்த வருட இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply