ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரன், மதுசூதனன், தீபா உள்பட 85 வேட்பாளர்கள் மனு ஏற்பு?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரன், மதுசூதனன், தீபா உள்பட 85 வேட்பாளர்கள் மனு ஏற்பு?

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 85 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு இந்த தேர்தலில் சாத்தியமில்லை என்றும், வாக்குச்சீட்டு முறையில்தான் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு டிடிவி தினகரன், அதிமுக அம்மா என்ற கட்சி பெயரில் தொப்பி சின்னத்திலும், ஓபிஎஸ் தரப்பு மதுசூதனன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் இரட்டை மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். மேலும் திமுக வேட்பாளராக மருது கணேஷ் மற்றும் தீபா பேரவையின் சார்பாக தீபா போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் முடிந்துவிட்ட நிலையில் நேற்று தினகரன், மதுசூதனன், கங்கை அமரன், தீபா உள்பட கிட்டத்தட்ட 127 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில், டிடிவி தினகரன், கங்கை அமரன், மதுசூதனன் உள்பட 85 பேரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஆகியோர் உள்பட பலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply