சர்ஜரியின்போது அழுத குழந்தையை புத்திசாலித்தனமான சமாளித்த நர்ஸ்.

சர்ஜரியின்போது அழுத குழந்தையை புத்திசாலித்தனமான சமாளித்த நர்ஸ்.
[carousel ids=”72872,72873,72874,72875″] நர்ஸ் தொழில் என்பது புனிதமானது என்றும் நர்ஸ் பணிபுரிபவர்கள் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள் என்றும் நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கின்றோம். இந்நிலையில் சீனாவில் உள்ள ஒரு நர்ஸ் ஒருவயது குழந்தை ஒன்றுக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது தாயுள்ளத்துடன் புத்திசாலித்தனமாக செய்த ஒரு காரியத்தால் குழந்தையின் உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.

சீனாவில் உள்ள Wei Wei என்ற ஒருவயது குழந்தைக்கு தலையில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தது. குழந்தையின் வயதை கருத்தில் கொண்டு வீரியம் குறைவான மயக்க மருந்தை கொடுத்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென குழந்தை விழித்து அழ ஆரம்பித்தது. குழந்தை அழுதுகொண்டிருந்தால் அறுவை சிகிச்சையை தொடர முடியாத நிலையில் மருத்துவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில், அங்கு பணியாற்றிய நர்ஸ் உடனே குழந்தையை தூக்கி தாய்ப்பால் கொடுத்தார். அவரது புத்திசாலித்தனமான செய்கையால் குழந்தை அழுகையை நிறுத்தியது.

இதன்பின்னர் மருத்துவர்கள் தங்கள் அறுவை சிகிச்சையை தொடர்ந்தனர். நர்ஸின் சமயோசித அறிவை மருத்துவர்கள் பெரிதும் பாராட்டினர். குறிப்பாக குழந்தையின் தந்தை Li Baoxia, அந்த நர்ஸுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply