அமைச்சரின் வீட்டில் உள்ள 17 பேர்களுக்கு கொரோனா:

பெரும் பரபரப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ் என்பவரின் வீட்டில் இருக்கும் 17 பேர்களுக்கு கொரொனா பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் அமைச்சரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து அவரது வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்யப்பட்டபோது மொத்தம் 17 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ் அவர்களின் மகன் மற்றும் மருமகள் மற்றும் வீட்டில் பணிபுரிபவர்கள் என மொத்தம் 17 பேர்களுக்கு தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து அவரது வீட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பதும் அமைச்சரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply