60 மணிநேரம் கடலில் சிக்கி உயிர் பிழைத்த சுற்றுலா பயணி

டோக்கியோ கடலில் குளிக்க சென்ற தைவான் நாட்டை சேர்ந்த ஒருவர் பெரிய அலை ஒன்றினால் இழுத்து செல்லப்பட்டு சுமார் 60 மணிநேரம் கழித்து உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.

தைவான் நாட்டை சேர்ந்த ட்செங் லீந்-ஃபா என்ற 42 வயது நபர் சுற்றுலாவுக்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளியன்று சென்றுள்ளார். அங்குள்ள கடலில் குளிக்க ஆசைப்பட்டு கடலில் இறங்கினார். நீச்சல் தெரியாத அவரை ஒரு பெரிய அலைவந்து வாரி சுருட்டி கடலுக்குள் இழுத்து சென்றது. கடலில் தத்தளித்து கொண்டிருந்த அவருக்கு தற்செயலாக அங்கு மிதந்துவந்த சவப்பெட்டி ஒன்று கைகொடுத்தது.

சவப்பெட்டியை பிடித்தவாறே அவர் சுமார் 60 மணிநேரம் கடலில் மிதந்துள்ளார். உணவு, தண்ணீர் இன்றி இருந்த அவரை நேற்று முன் தினம் மீட்புப்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நீச்சல் தெரியாத ட்செங் லீந்-ஃபா, சுமார் 60 மணி நேரம் கடலில் போராடி உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply