மாணவியின் நிர்வாண புகைப்படத்தால் நிலநடுக்கம்? மலேசியா போலீசார் அதிரடி நடவடிக்கை

[carousel ids=”65774,65775,65776″]

இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத் தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் மாணவி எலினார் ஹாக்கின்ஸ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த மே 30ஆம் தேதி மலேசியாவில் உள்ள மிக உயரமான கிணபாழு என்ற சிகரத்தில் தனது குழுவினர்களுடன் ஏறினார். மலை உச்சியை அடைந்ததும் ஏற்பட்ட சந்தோஷத்தால் உணர்ச்சி வசப்பட்டு தான் அணிந்திருந்த உடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக ஆடிப்பாடினார். நிர்வாணத்துடன் புகைப்படமும் எடுத்து அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் கிணபாழு சிகரத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டு அதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நில நடுக்கத்திற்கு இங்கிலாந்து மாணவியின் நிர்வாணமாக புகைப்படமே காரணம் என மலேசிய அமைப்பு ஒன்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து எலினார் ஹாக்கின்ஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் என்பது இயற்கை அழிவுகளில் ஒன்று. என்னுடைய புகைப்படத்திற்கு அதற்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறையினர்களிடம் எலினார் வாதாடி வருகின்றார். இருப்பினும் அவரை விடுதலை செய்ய போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply