ஐந்து ரூபாய் நாணய தட்டுப்பாட்டு அதிகரித்து வருவதை தடுக்க 25 ரூபாய் நோட்டை அறிமுகப் படுத்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுமக்களிடம் 10 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவை ஏராளமாக புழங்கிவரும் நிலையில் ஐந்து ரூபாய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சில்லறை தட்டுப்பாடு காரணமாக பல நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சனை வருவதாக கூறப்படுகிறது. எனவே இதனை தவிர்க்க 25 ரூபாய் நோட்டு வெளியிட சமிபத்தில் கோரிக்கை விடப்பட்டது.
இந்த கோரிக்கையை ராம்தாஸ் சிங்கால் என்பவர் கடிதம் மூலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு தெரிவித்ததாகவும், 25 ரூபாய் நோட்டு வெளியிட வேண்டும் என்ற இவரின் கோரிக்கையை பிரதமர் மோடி பரிசீலனை செய்து அதன் பின்னர் இதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 25 ரூபாய் நோட்டு வெளியிடும் யோசனையை ரிசர்வ் வங்கி பரிசீலித்து, ஏற்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி 25 ரூபாய் நோட்டினை வெளியிடுகிறபோது, 5 ரூபாய் சில்லறை தட்டுப்பாடு பெருமளவு நீங்கி விட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது