துபாயில் பணமழை. பொதுமக்கள் ஆச்சரியம்

dubaiதுபாய் நகரின் பரபரப்பான வீதியொன்றில் லட்சக்கணக்கான மதிப்புள்ள துபாய் கரன்சி சாலையில் திடீரென கொட்டியதால் அந்த பணத்தை அள்ள அங்குள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1D98cOX” standard=”http://www.youtube.com/v/UJ34zC_hEAM?fs=1″ vars=”ytid=UJ34zC_hEAM&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7781″ /]

இந்த சம்பவம் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றுள்ளது. துபாயின் ஜூமைரா என்ற பகுதியில் திடீரென அடித்த சூறாவளி காற்றின் காரணமாக விண்ணிலிருந்து பணமழை கொட்டியது. ஒவ்வொன்றும் 500 திர்ஹாம் கொண்ட இந்த கரன்சிகள் எங்கிருந்து விழுந்தன என்பது தெரியவில்லை. இருப்பினும் கரன்சியை சாலையின் நடுவில் பார்த்த பொதுமக்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச்சென்றனர்.  ஒருசிலர் மட்டும் பணத்தை எடுக்காமல் இந்த சம்பவத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் குறியாக இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த பகுதிக்கு வந்த போலீஸார் பணத்தை எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை எச்சரித்து அந்த பகுதியில் இருந்து விரட்டியடைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Reply