கடந்த ஒருவார காலமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலைகள் பெருமளவு சேதமடைந்துள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் சாலைகளை மீட்புப்பணிகளை கவனித்து வந்தபோதிலும் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரிப்படுத்த நெடுஞ்சாலை அதிகாரிகள்தான் வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல் போலீஸார்களே கடப்பாறைகளை எடுத்து களத்தில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள முக்கிய பகுதி ஒன்றில் போக்குவரத்து போலீசாரே குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட்டு வருவதாகவும், இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கையில் கடப்பாரையுடன் திரியும் டிராபிக் போலீசார்கள் செங்கற்களை உடைத்து போட்டு சாலையில் உள்ள குண்டு குழிகளை நிரப்பி வருகின்றனர்.
இதுபோல் மற்ற பகுதிகளில் இருக்கும் போலீஸார் உள்பட பொதுமக்களும் தங்களால் இயன்றதை உதவியை சாலையை சீரமைப்பதில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.