ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி.

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி.
traffic
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் விளக்கம் அளித்த வழக்கறிஞர் “ஆர்.கே.நகர் தொகுதியில் பதட்டமான பூத்கள் என 29 பூத்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் உள்ள 104 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத்தபட்டுள்ளதாகவும், மேலும் தொகுதி முழுவதிலும் துணை ராணுவ பாதுகாப்பும், 230 இடங்களில் நுண் பார்வையாளர்களும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விளக்கம் அளித்தார்.

இவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தேர்தல் பாதுகாப்பு பணிகளை தொடங்கிவிட்டதாலும், இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தது.

Leave a Reply