ஆந்திராவில் ரயில்-லாரி மோதல். காங்கிரஸ் எம்.எல்.ஏ உள்பட 6 பேர் பலி

ஆந்திராவில் ரயில்-லாரி மோதல். காங்கிரஸ் எம்.எல்.ஏ உள்பட 6 பேர் பலி

[carousel ids=”70397,70398,70399,70400″]

 ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற நகரின் அருகே லெவல் கிராசிங்கை கடந்து கொண்டிருந்த ரயில் மீது லாரி ஒன்று மோதிய விபத்தில் கர்நாடக எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். எம்.எல்.ஏ மரணத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த நந்தீத் எக்ஸ்பிரஸ் ரயில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் மதகாசிரா அருகே ஒரு லெவல் கிராசிங்கை மிக வேகமாக கடந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று திடீரென ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து நடந்தபோது அதிகாலை 2.30 மணி என்பதால் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில எம்.எல்.ஏ. வெங்கடேஷ் நாயக், லாரி டிரைவர், கிளீனர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

ஜல்லி லாரி, ரயில் மீது மோதிய வேகத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே மீட்பு பணியாளர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக, பெங்களூரு-குண்டக்கல் இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Bangalore Railway station: 08022354108, 0731666751, 08022156553
Accident site: 09701374062, 09493548005, 09448090399, 00873763945549

Leave a Reply