ஐசிஐசிஐ வங்கி இணையதளத்தில் ரயில் டிக்கெட்.
ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுக்களை ரிசர்வ் செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தை மட்டுமே இதுவரை அணுகவேண்டிய நிலை இருந்தது. ஆனால் இனிமேல் ஐஆர்சிடிசி மட்டுமின்றி ஐசிஐசிஐ வங்கி இணையதளத்திலும் ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கான ஒப்பந்தம் ஒன்றை இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC-யுடன் ஐசிஐசிஐ வங்கி செய்திருப்பதாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் மட்டுமின்றி செல்போனில் வங்கிச் சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்களும் ரயில் பயணச் சீட்டை இனிமேல் எளிதாக வாங்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியைப் பெறுவதற்கு IRCTC இணைய தளத்தில் ஒருமுறை தங்கள் விவரத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
English Summary: Indian Railways online ticket booking: ICICI Bank does a first, launches rail facility on website