கடந்த ஜூலை மாதம் டிரான்ஸ் ஆசியா நிறுவனத்தின் விமானம் ஒன்று பெங்கூ தீவு அருகே வீடுகளின் மேல் விழுந்து நொறுங்கி 48 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த நிலையில் நேற்று இதே நிறுவனத்தை சேர்ந்த ஒரு விமானம் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று தைவானில் உள்ள சாங்ஷன் நகரில் இருந்து கின்மெந்தீவுக்கு டிரான்ஸ் ஆசியா ஏ.டி.ஆர். 72 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 58 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட ஒருசில நிமிடங்களில் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்தது..
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1C0pXll” standard=”http://www.youtube.com/v/H5Z-7uoYAgU?fs=1″ vars=”ytid=H5Z-7uoYAgU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3476″ /]அதை தொடர்ந்து அந்த விமானம் அங்கிருந்த ஒருஆற்றில் விழுந்தது. முன்னதாக அந்த விமானம் ஆற்றின் மீது உள்ள பாலத்தில் இடித்து தண்ணீருக்குள் விழுந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருந்தும் விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உள்பட 17 பேர் பலத்த காயத்துடன் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பல பயணிகள் விமானத்திற்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது