போக்குவரத்து கழக அமைச்சருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று சந்திப்பு. முக்கிய பேச்சுவார்த்தை

bus strikeகடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சரை இன்று அனைத்து தொழிற்சங்கத்தினர்களின் பிரதிநிதிகளும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

போக்குவரத்துக் கழக நிர்வாகியுடன் நேற்று நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகள் குறித்து போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை சந்திக்கின்றனர்.

இந்தச் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply