8வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு: பொங்கல் கொண்டாட முடியுமா?

8வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு: பொங்கல் கொண்டாட முடியுமா?

போக்குவரத்து தொழிலாளார்களின் வேலைநிறுத்தம் இன்று 8வது நாளாக நீடித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர், நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளார்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவு பேருந்துகளே இயங்குகின்றன

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சென்னையில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் அரசு அறிவித்த 11 ஆயிரத்து 983 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது வரை முன்பதிவு மையங்கள் கூட திறக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு பொங்கல் திருநாளை தங்களது குடும்பத்தினர்களுடன் கொண்டாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூாிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூாி பேருந்துகளைக் கொண்டு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தொிகிறது. இருப்பினும் இதுகுறித்து அரசிடம் இருந்து அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Leave a Reply