வெளிநாட்டு தொழிலாளர்களை போல அதிரடி முடிவு எடுத்த போக்குவரத்து தொழிலாளர்கள்

வெளிநாட்டு தொழிலாளர்களை போல அதிரடி முடிவு எடுத்த போக்குவரத்து தொழிலாளர்கள்

வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்கள் வித்தியாசமாக இருக்கும் என்பது பலர் அறிந்ததே. ஒரு ஷூ நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்தியபோது இடது கால் ஷூவை மட்டும் தயாரித்தனர். இதனால் அந்த நிறுவனம் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களது கோரிக்கையை நிறைவேற்றியது

அதேபோல் இன்னொரு நாட்டில் போராட்டம் செய்த போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பயணிகளிடம் காசு வாங்காமல் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தனர். அதன்பின்னர் அந்நாட்டு அரசு என்ன செய்திருக்கும் என்று கூற தேவையில்லை

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆறு நாட்களாக போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து தொழிலாளர்களும் இதே முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தங்களது கோரிக்கையை நிறைவேற்றால் பணிக்கு கட்டாயமாக அனுப்பப்பட்டால் பயணிகள் யாரிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply