பாலியல் வன்கொடுமையில் இருந்து இனி சிறுவர்கள் தப்பிக்க முடியாது. மேனகா காந்தி அதிரடி

 

menaka gandhiபாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக சிறுவர்களின் வயது வரம்பை 18–லிருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என சென்னையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.

சென்னை திருவான்மியூரில் நடந்து வரும் 6வது இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை, மத்திய குழந்தைகள் நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஆரம்பித்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ” பாலியல் வன்கொடுமைகள் செய்யும் 18 வயதுக்கு குறைவானவர்கள் சிறுவர்கள் என்ற காரணத்தை கூறி தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர். இதனால் அவர்கள் வேண்டுமென்றே தவறு செய்யும் பழக்கம் உள்ளவர்களாக மாறுகின்றனர். இதனை தடுப்பதற்காக மத்திய அரசு இளஞ்சிறார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளது.

தற்போது குற்றம் செய்பவர்களில் 50 சதவீதம் பாலியல் வன்கொடுமைகளில் 16 வயது உள்ளவர்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். இதனை தடுப்பதற்காக மத்திய அரசு சிறார் நீதி சட்டத்தின்படி சிறுவர்களுக்கான வயது 18 என்பதை 16 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது. இதனை வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்.

Leave a Reply