மது குடிக்கும் போராட்டம். திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

மது குடிக்கும் போராட்டம். திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

[carousel ids=”68884,68885,68886″]

மதுவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை நடத்தி வரும் நிலையில் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப, மதுவுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த மது குடிக்கும் போராட்டம் ஒன்றை நடத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை சுற்றிலும் “” வாங்க மதுக்குடிக்கலாம், ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்… அனைவரும் குடிப்போம், உங்களுக்கு குடல் அழுகி போனால் என்ன, உங்க குடும்ப நிம்மதியில்லாமல் தவித்தால் என்ன, அரசுக்கு தேவை வருமானம், அரசுக்கு பணம் கொடுத்து உதவ வாங்க மது குடிக்கலாம்” என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் ‘விடியலை தேடும் இந்தியர்கள்’ என்ற அமைப்பினர் இந்த போஸ்டரை ஒட்டியிருந்தனர்.

பின்னர் காலை 11 மணியளவில்,  திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள், கடையில் காசுகொடுத்து மது வாங்க முயற்சி செய்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் வாக்குவாதமும் பின்னர் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இறுதியில் மது குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட  சட்டக்கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply