த்ரிஷா, ஹன்சிகாவை புலம்ப வைத்த ஹேக்கர்கள்

த்ரிஷா, ஹன்சிகாவை புலம்ப வைத்த ஹேக்கர்கள்

trishaaஉலகம் முழுவதும் ஹேக்கர்களின் தொல்லைகள் தாங்க முடியவில்லை. எவ்வளவு பாதுகாப்பாக ஃபைல்களை வைத்திருந்தாலும் கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் அதில் நுழைந்து தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இந்த ஹேக்கர்கள் தற்போது கம்ப்யூட்டரை மட்டுமின்றி மொபைல் போன்களையும் ஹேக்கிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதில் சமீபத்தில் சிக்கியவர்கள் நடிகை த்ரிஷாவும் ஹன்சிகாவும். நடிகை த்ரிஷாவின் மொபைல் போனில் ஹேக்கர்கள் புகுந்த் காண்டாக்ட் எண்கள் உள்பட முக்கியமானவற்றை அழித்துவிட்டதாகவும், இதனால் 327268-hansika-motwaniஅவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை த்ரிஷாவும் தன்னுடைய டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

அதேபோல் ஹன்சிகாவின் மொபைல் போனில் உள்ள முக்கியமான பைல்களும் காணாமல் போய்விட்டதாம், இருவருமே தங்களுடைய மொபைல் எண் வைத்திருப்பவர்கள் தங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply