திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ த்ரிஷா முடிவா? திடுக்கிடும் தகவல்
கடந்த பத்து வருடங்களாக கோலிவுட் திரையுலகில் கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, சமீபத்தில் பிரபல தொழிலதிபர் வருண்மணியனை காதலித்தார். இந்த காதல் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நடைபெறாமல் இருவருக்கும் இடையே இருந்து வந்த உறவு முறிந்துவிட்டது.
இந்நிலையில் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா கமல்ஹாசனுடன் தூங்காவனம், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 2’ மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திருமணம் செய்யாமல் வாழும் லிவ் இன் உறவு குறித்து கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லிவ் இன் உறவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் லிவ் இன் உறவு சரி என்று தோன்றினால், பிறகு அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது. திருமணம் செய்து, கருத்துவேறுபாடுகளால் விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் இருந்து பிரிவது மேலானது என எண்ணுகிறேன் என்று த்ரிஷா ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறினார்.
த்ரிஷாவின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. லிவ் இன் உறவுக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளதால், த்ரிஷா தனது சொந்த வாழ்க்கையில் அவர் கடைபிடிப்பாரா? என்ற கேள்வியையும் பலர் டுவிட்டரில் எழுப்பியுள்ளனர்.