உலகெங்கிலும் உள்ள வி.ஐ.பிக்களை ஆட்டிப் படைத்து வரும் ஐஸ் பக்கெட் குளியல் பாலிவுட் திரையுலகை ஆக்கிரமித்து தற்போது கோலிவுட்டையும் கலக்கி வருகிறது. ஏற்கனவே கோலிவுட்டின் பிரபல நடிகை ஹன்சிகா ஐஸ்குளியல் குளித்து ஆரம்பித்து வைத்துவிட்டார். தற்போது இந்த ஐஸ்குளியல் கலாச்சாரம் நடிகை த்ரிஷாவையும் பற்றிக்கொண்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பில் அந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கும் அருண் விஜய், தனது ஐஸ்குளியலை முடித்துவிட்டு பின்னர் அவர் தனது நண்பர்களான ஜெயம் ரவி, வெங்கட்பிரபு ஆகியோர்களோடு அந்த படத்தின் நாயகிகளுள் ஒருவரான த்ரிஷாவை ஐஸ் குளியல் குளிக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே படக்குழுவினர் உடனடியாக த்ரிஷாவின் ஐஸ்குளியலுக்கு தயார் செய்தனர். படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே சுமார் 100 பேர் முன்னிலையில் த்ரிஷாவின் ஐஸ் குளியல் நடந்தது.
ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் குளியல் என்ற இந்த விஷயம் அமெரிக்காவில் உள்ள நரம்பு பாதுகாப்பு அமைப்பு ஆரம்பித்து வைத்தது. இந்த ஐஸ் பக்கெட் குளியல் செய்பவர்கள் மற்ற மூன்று பேர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படுவர்கள் ஐஸ் குளியல் குளிக்க மறுத்தால் அவர்கள் இந்த அமைப்புக்கு $100 பணம் நிதி கொடுக்க வேண்டும். இதுவரை கோடிக்கணக்கான டாலர் நிதி குவிந்துவிட்டது. இந்த ஐஸ் குளியலை ஒபாமா, பில் கேட்ஸ், ஃபேஸ்புக் அதிபர் மார்க் உள்பட முக்கிய வி.வி.ஐ.பிக்க்ள் அனைவரும் குளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.