பிரபல தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளருமான வருண்மணியனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை த்ரிஷா அவரை விட்டு பிரிந்ததோடு, நடைபெறவிருந்த திருமணத்தையும் ரத்து செய்தார். மேலும் வருண்மணியன் தயாரிக்கவிருந்த திரு இயக்கத்தில் ஜெய்யுடன் நடிக்கவிருந்த படத்தில் இருந்தும் அவர் விலகினார்.
இந்நிலையில் வருண்மணியன் தயாரிப்பதாக கூறப்பட்ட செல்வராகவன் இயக்கும் படத்தில் இருந்தும் த்ரிஷா தற்போது விலகியுள்ளார். சிம்பு-த்ரிஷா ஜோடியாக நடிக்கவுள்ள படம் ஒன்றை இயக்க செல்வராகவன் ஆரம்பகட்ட பணிகளை நடத்தி வந்த நிலையில் இந்த படத்திற்கு வருண்மணியன் முதலீடு செய்வதாக கூறப்பட்டது. இந்நிலையில் த்ரிஷாவுக்கு பதிலாக மெட்ராஸ் பட நாயகி கேதரின் தெரசா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
செல்வராகவன் கேட்ட தேதிகள் அனைத்தையும் கொடுக்க கேதரீன் தெரசா ஒப்புக்கொண்டதாகவும், இம்மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து விலகிய த்ரிஷா, இந்த படத்திற்காக கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகள் அனைத்தையும் கமல்ஹாசனின் அடுத்த படமான ‘ஒரே இரவில்’ படத்திற்காக கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.