தீவிரமாகியது ஹூட்ஹூட் புயல். சென்னை துறைமுகத்தில் புயல் அபாய எச்சரிக்கை.

typhoonவங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஹூட்ஹூட் புயல் இன்று அதி தீவிரமடைந்து நாளை விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹூட்ஹூட் புயல் காரணமாக தமிழகத்திற்கு அதிக பாதிப்பு இல்லை என்றும் இருப்பினும், சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி, பாம்பன், எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால் துறைமுகங்களிலும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி புயல் சின்னம் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவு நிலவரப்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து 590 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபால்பூரிலிருந்து 610 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து, நாளை மறுநாள் முற்பகலில் வடக்கு ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அப்போது வடக்கு ஆந்திராவிலும், தெற்கு ஒடிசாவிலும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மழை எச்சரிக்கையை தொடர்ந்து, விமான படையினரை தயாரா இருக்கும் படி உத்தரைவிட வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லிக்கு ஒடிஷா அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

இதன் விளைவாக ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே, வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 180 பேர், துணை கமாண்டோ சான்ட்ரோ தலைமையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 4 குழுக்களாக விசாகப்பட்டினம் சென்றுள்ளனர்.

Leave a Reply