டிரம்ப்-கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறுகிறதா?

டிரம்ப்-கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறுகிறதா?

அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகள் கடந்த சில ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த நிலையில் தற்போது சமாதானமாகியுள்ள இம்மாதம் டிரம்ப் மற்றும் கிம் ஆகியோர் நேரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் இரு தலைவர்களும் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது,

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை தென்கொரியா பாதுகாப்பு ஆலோசகர் யூ-யோங் நேற்று முன்தினம் இரவு வாஷிங்டன் நகரில் சந்தித்து பேசினார். அவர்கள் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்து விவாதித்தனர். அப்போது சிங்கப்பூர் நாட்டில் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என்று இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இரு தலைவர்களும் இம்மாதம் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு அதிகாரிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் இடம்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply