புதின் உடனான பேச்சு திருப்தி அளிக்கிறது. டொனால்ட் டிரம்ப்
உலகின் இரு துருவங்களாக இருந்து வரும் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிபர்கள் நேற்று ஜி20 மாநாட்டின்போது சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
ஜி-20 மாநாட்டை அடுத்து, ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்தியப் பிரதமர் மோடி உள்பட பலநாட்டுத் தலைவர்கள் கூடியுள்ளனர். இந்த நிலையில், ”ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சு திருப்திகரமாக இருந்தது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “நாங்கள் இருவரும் பல விஷயங்களை விவாதித்தோம். பேச்சுக்கள் நன்றாகப் போயின. அடுத்து வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல விஷயங்கள் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.