ஒபாமாவின் முக்கிய உத்தரவை ரத்து செய்தார் டிரம்ப்
ஆண்கள், பெண்கள் ஆகிய பாலினங்களை அடுத்து திருநங்கைகளாக இருக்கும் மூன்றாம் பாலின மாணவர்கள் அவர்களுடைய விருப்பப்படி எந்த பாலின கழிப்பறைகளையும் உபயோகிக்கலாம் என்ற முன்னாள் அதிபர் ஒபாமா அரசின் உத்தரவை, டொனால்ட் டிரம்ப் அதிரடியாக ரத்து செய்தார்
முன்னாள் அதிபர் ஒபாமாவின் இந்த உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், தேவையற்ற ஒன்றாகவும் உள்ளது” என்று அமெரிக்க நீதித்துறை, பள்ளித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகள் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்று வெள்ளை மாளிகை முன் மூன்றாம் பாலின மாணவர்கள் கூடி திருநங்கை மாணவர்கள் டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட டிரம்ப் ஏற்கனவே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், ஒபாமாவின் முக்கிய அறிவிப்பை ரத்து செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.