சீன புத்தாண்டு விழாவில் மகளுடன் கலந்து கொண்ட டிரம்ப் மகள்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரெம்ப் பதவியேற்றதில் இருந்து சீனாவுக்கு எதிராக மறைமுகமாக அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், சீனத் தூதரகத்திற்கு சென்று சீன புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
சீனப்புத்தாண்டு உலகம் முழுவதிலும் உள்ள சீனர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்திற்கு திடிரென வருகை தந்த டிரம்ப் மகள் இவாங்க, அமெரிக்காவின் சீனத் தூதுவர் டியான்காய்யுடன் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டார். அவருடன் இவாங்கா மகளும், டிரம்பின் பேத்தியுமான அரபெல்லா கலந்து கொண்டு சீன மொழியில் பாடல் ஒன்றை பாடினார். இந்த வீடியோவை இவான்கா டிரம்ப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.