7 நாடுகள் விசா தடையை எதிர்த்த அட்டர்னி ஜெனரல் நீக்கம். டிரம்பின் அடுத்த அதிரடி
ஈரான், ஈராக், சிரியா உள்பட ஏழு நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விசா இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக எடுத்த முடிவை உலகமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிறநாடுகள் மட்டுமின்றி அமெரிக்காவிலேயே இந்த முடிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அவ்வாறு கண்டனம் தெரிவித்தவர்களில் ஒருவர் அமெரிக்க அட்டனர்னி ஜெனரல். ஆனால் இவருக்கு அதிபர் டிரம்ப் கொடுத்த பரிசு டிஸ்மிஸ் என்பதுதான் கொடுமையானது
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: எல்லை தொடர்பான விஷயங்களில், சட்ட விரோத குடியேற்றம் போன்றவற்றில் மிகவும் மோசமான நிலையில் அட்டார்னி ஜெனரல் சல்லி யாட்ஸ் நடந்து கொண்டார். அமெரிக்க மக்களை காப்பாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட உத்தரவுகளை அமல்படுத்தாமல், நீதித்துறையை சல்லி ஏமாற்றிவிட்டார். எனவே அட்டார்னி ஜெனரல் பொறுப்பில் இருந்து சல்லி விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவருக்கு பதிலாக அட்டர்னி ஜெனரல் பதவிக்கு ஜெப் செஷன்ஸ் டானா போயன்டி என்பவரை டிரம்ப் அரசு நியமித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அட்டர்னி ஜெனரல் சல்லியாட்ஸ் நீக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.