கல்பனா சாவ்லாவுக்குக் புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர்

கல்பனா சாவ்லாவுக்குக் புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர்

இந்தியாவின் விண்வெளி வீராங்கனை மறைந்த கல்பனா சாவ்லா அவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டி பெருமைப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அரசின் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய அமெரிக்க மற்றும் பசிபிக் தீவுவாசி பாரம்பரிய பிரகடன விழா அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:

”இந்திய வம்சாவளிச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்துள்ளார். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மற்றும் குழு பயணம் என விண்வெளி துறைக்கு எண்ணற்ற பணிகளை அவர் ஆற்றியுள்ளார். ஒரு நாள் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் மில்லியன் கணக்கான அமெரிக்க பெண்களுக்கு சாவ்லாவின் தைரியமும், ஆர்வமும் உத்வேகம் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பின்னர் நாசா விண்வெளி மையம் அவருக்கு விண்வெளி விமான பதக்கம் மற்றும் சேவை பதக்கங்களை அளித்து கெளரவித்தது. இத்தகைய சாதனைகள் புரிந்த கல்பனா சாவ்லா ஒரு அமெரிக்க ஹீரோ” என்று கூறி கல்பனாவை பெருமைப்படுத்தினார் டிரம்ப்

Leave a Reply