உன்னை விட, டிரம்ப் ஆபத்தானவர். வடகொரியா அதிபருக்கு ரஷ்ய ஊடகம் அறிவுரை
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவருக்கு ஆரம்பம் முதலே ஆதரவாக இருந்த ரஷ்யா, டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ச்சி அடைந்து தற்போது அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் கிரிமியா பகுதியை ரஷ்யா அபகரித்துக் கொண்டதற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்கா-ரஷ்யா நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், தற்போது உலகில் ஆபத்தான நாடுகளாக அமெரிக்காவும், வடகொரியாவும் திகழ்ந்து வருவதாகவும், வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை விட, டிரம்ப் மிகவும் ஆபத்தானவர் என்று கூறியுள்ளது.
அமெரிக்கா நினைத்துவிட்டால், எந்த ஒரு நாட்டையும் அழிக்காமல் விடாது என்றும், போர் புரிவதில் மிகவும் பயங்கரமான நாடு என்று தெரிவித்துள்ள அந்த ஊடகம் அமெரிக்க எல்லையில் எந்த ஒரு போர்க் கப்பலையும் வடகொரியா நிறுத்தவில்லை என்றும், ஆனால் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதல் நடைபெறலாம் என்றும், அதனை உலகப் போராக மாற்றும் அளவிற்கு அமெரிக்கா மோசமான எண்ணங்களை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது